எமது நோக்கு

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
அட்டாளைச்சேனை எனும் பெயரானது “அட்டாளை"மற்றும் "சேனை” எனும் சொற்களிலிருந்து பெறப்பட்டது. இதில் “அட்டாளை” என்பது பயிர் நிலங்களை பாதுகாப்பதற்காக உயர் இடங்களில் நிறுவப்படும் ஓர் அமைப்பாகும், அத்துடன் “சேனை” என்பது சேனைப் பயிர்ச் செய்கையினைக் குறிக்கும்.

எனினும் பலரின் அபிப்பிராயப்படி விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டே அட்டாளைச்சேனை எனும் பெயர் தோற்றம் பெற்றதாக நம்புகின்றனர்.

1978 வரை அட்டாளைச்சேனைக் கிராமமானது அக்கரைப்பற்றின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. எனினும்  1978 இன் பின்னர் அது தனியான பகுதியாகப் பிரிக்கப்பட்டது.

DRO அலுவலகம் 1978 இல் அட்டாளைச்சேனையில் அமைக்கப்பட்டபோது இலங்கையின் விவசாய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக அது கருதப்பட்டது.

அட்டாளைச்சேனையானது 2000 வருடங்களுக்கு முன்பே வியாபாரிகளால் நன்கறியப்பட்ட பிரதேசமாகக் காணப்பட்டது.

1991இல் பிரதேச செயலகத்தை அமைப்பதற்கு முன் உதவி அரசாங்க அதிபரின் அலுவலகமானது பிரதேச மக்களுக்கு அன்றாட சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தது.

1973.10.10 இல் பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி என்பவற்றை உள்ளடக்கியதாக அட்டாளைச்சேனை உதவி அரச அதிபர் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வலுவலகம் அம்பாரைக் கரையோமாக அக்கரைப்பற்று - மட்டக்களப்பு பிரதான பதையின் 36 ஆவது  மைல்கல் அருகே அமையப்றெ;றுள்ளது.

இப்பிரதேச செயலக நிர்வாக எல்லையாக வடக்கே களியோடை ஆறும் தெற்கே அக்கரைப்பற்று பிரதேச நிர்வாக எல்லை மற்றும் வடிகான் வீதிய[ம், கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கே பரந்து விரிந்த நெல் வயல்கள் மற்றும் சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் தமன பிரதேச செயலகங்களின் நிர்வாக எல்லைகளும் காணப்படுகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் வரலாறு

10.10.1973க்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேசமானது அக்கரைப்பற்று பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. அத்திகதிக்குப் பின்னர் அட்டாளைச்சேனைப் பிரதேசமானது அக்கரைப்பற்று பிரதேச நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனியான பிரதேசமாக பிரிந்து செயற்பட்டது. இதற்கு அக்காலத்தில் செயற்பட்ட “சமூக சேவை சமூகம்” எனும் அமைப்பு காலஞ்சேன்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம் முஸ்தபாவுடன் இணைந்து பக்கபலமாக செயற்பட்டது.

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு. செனரத் சோமரத்ன மற்றும் அம்பாரைப் பிரதேச அரசியல் அதிகார சபைகளின் கீழ் நிர்வாகக் கட்டிடத்தினை அமைப்பதற்கு டீ.சீ.பியிலிருந்து போதுமான நிதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உதவிடன் 2017.03.03 இல் மேலும் இரு கட்டிடங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.


அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இதுவரையில் பிரதேச செயலாளர்களாக பதவி வகித்தவர்கள் பற்றிய விபரம்

பெயர்                தொடக்கம்               வரை

S.ரங்கராஜா                1978            1979
விஜேவர்தன        .      1979            1980
பியசேன                     1980            1981
GAC. டி சில்வா            1981            1984
ராஜபக்ஷ                .    1984     .       1985
A. அப்துல் மஜீட்    .     1985            1987
S. உமர்               ....     1987            1989
KMA. காதர்           ...     1989            1990
K. சம்டுடீன்                 1990            1991
AHM. அன்சார்              1991            1993
ULA. அஸீஸ்                1993            2005
UL. நியாஸ்             ..   2005            2008
IM. ஹனிபா (Acting         2008            2009
MM. நஸீர்            .....    2009            2011
IM. ஹனிபா              ..  2012            2017
TJ. அதிசயராஜ் (Coverup) .. 2017          2018
J. லியாகத் அலி                2018 தொடக்கம் இன்று வரை      

News & Events

28
ஆக2017
DCC meeting in divisional Secretariat confrence Hall on 2018.10.23

DCC meeting in divisional Secretariat confrence Hall on 2018.10.23

The DCC meeting in divisional Secretariat confrence Hall...

28
ஆக2017
Welcome Celebration  New Year 2019

Welcome Celebration New Year 2019

New year celebration was held in Ouffice...

குடியுரிமை சாசனம்

Scroll To Top